பக்கம் எண் :

644
 
266.

நீறார் மேனியனே நிம

லாநினை யன்றிமற்றுக்

கூறேன் நாவதனாற் கொழுந்

தேயென் குணக்கடலே

பாறார் வெண்டலையிற் பலி

கொண்டுழல் காளத்தியாய்

ஏறே யுன்னையல்லால் இனி

ஏத்த மாட்டேனே.

8



திருக்காளத்திப் பெருமானே, அடியேன் உன்னையன்றி மற்றொரு வரைக் கடவுளராக அறிதலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: "காதன்மையால்" என்பது, "அறியாத" என்பதன் முதனிலையோடு முடிந்தது. 'உள்ளம்' என்பது, குறைந்து நின்றது. முயங்குதலுக்கு, 'திருவடி' என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'மற்றொருவர்' என்பது, 'மற்றொன்று' என்பது அடியாகப் பிறந்த பெயர். ஈண்டும், 'அறிந்தேத்த மாட்டேனே' எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

8. பொ-ரை: திருநீறு நிறைந்த திருமேனியை உடையவனே, தூயவனே, தலையாயவனே, எனக்கு அருட்கடலாய் நிற்பவனே, பருந்து சூழும் வெள்ளிய தலையில் பிச்சையேற்றுத் திரியும், திருக்காளத்திப் பெருமானே, ஆண் சிங்கம் போல்பவனே, அடியேன் உன்னையறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன்; என் நாவால் ஒன்று செய்வதாயின், உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: கொழுந்து, உச்சிக்கண் நிற்பதாகலின், உயர்ந்த பொருளை, 'கொழுந்து' என உவமம் பற்றிக் கூறல் வழக்கு.

"என் குணக் கடலே" என்றது, தமக்குப் புலனாம் வகையை அருளியவாறு, "இனி" என்றது, சிவபெருமானது பெருமையை அறிந்த கால எல்லையைக் குறித்தது.