| மெய்யவ னேதிருவே விளங் | | குந்திருக் காளத்திஎன் | | ஐயநுன் றன்னையல் லால் அறிந் | | தேத்த மாட்டேனே. | | 6 |
265. | கடியேன் காதன்மையாற் கழற் | | போதறி யாதவென்னுள் | | குடியாக் கோயில்கொண்ட குளிர் | | வார்சடை யெங்குழகா | | முடியால் வானவர்கள் முயங் | | குந்திருக் காளத்தியாய் | | அடியே னுன்னையல்லால் அறி | | யேன்மற் றொருவரையே. | | 7 |
வடிவினனே, பேரின்பமானவனே, புகழுடையதாகிய திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே, என் தலைவனே, அடியேன், உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும். கு-ரை: "பொய்யவன்" என்றது, உனக்கு 'ஆளல்லேன்' என்றதனை, 'நாய் அடியேன்' என்றது, 'உண்மை இதுவாக' என்றபடி. "நெறியொன்று அறியேன்" என்றது, மையல் மானுடமாய் மயங்கும் நிலையினை எய்தினமை குறித்தது. "இடர்" என்றதும், அம் மையல் காரணமாக எய்தற்பாலனவற்றை, "மெய்" என்றது, 'உன்னைத் தடுத்தாட் கொள்வோம்' என்றருளிய மொழி பிறழாது வந்த திருவருளை. "திரு" ஆதல், ஆட்கொண்ட பின்னர் வெளிப்பட்ட நிலையில் அறியப்பட்டது. இவற்றால் எல்லாம், 'என்னைத் தாங்குதலாகிய நின் கடமையிற் சிறிதும் வழுவினாய் அல்லை' என்பார், "என் ஐய" என அழைத்தருளினார். இங்ஙனமாகவே, அடியேன் பிறரை அறிதல் எவ்வாறு நிகழும் என்றதாம். 7. பொ-ரை: வன்கண்மை உடையவனும், அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணர்தலைச் செய்யாதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடமாகுமாறு அதனைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே, தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற
|