263. | செஞ்சே லன்னகண்ணார் திறத் | | தேகிடந் துற்றலறி | | நஞ்சேன் நானடியேன் நல | | மொன்றறி யாமையினால் | | துஞ்சேன் நானொருகாற் றொழு | | தேன்றிருக் காளத்தியாய் | | அஞ்சா துன்னையல்லால் அறிந் | | தேத்த மாட்டேனே. | | 5 |
264. | பொய்யவ னாயடியேன் புக | | வேநெறியொன் றறியேன் | | செய்யவ னாகிவந்திங் கிட | | ரானவை தீர்த்தவனே |
5. பொ-ரை: திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே, உன் அடியவனாகிய நான், நன்மை ஒன்றையே உணர்ந்து நில்லாத காரணத்தால், சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து, மிகக்கதறி வருந்தினேன்; அதனிடையே ஓரொருகால், நான் மடிந்திராது உன்னை வணங்கினேன்; எவ்வாறாயினும் அச்சமின்றி, உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும். கு-ரை: 'உற' என்பது, 'உற்று' எனத் திரிந்து நின்றது; 'கிடந்துற்று' என, ஒரு சொல்லாகக் கொள்ளினுமாம். 'நைந்தேன்' என்பது, 'நஞ்சேன்' என மருவிற்று. "அஞ்சாது" என்றது, ஏத்துதலாகிய முதனிலையோடே முடிந்தது; அதனால், மெய்யுணர்ந்தோர், பிற தெய்வங்களை ஏத்த அஞ்சுதல் - கூசுதல் - பெறப்பட்டது. இனி, அதனை, "ஏத்தமாட்டேனே" என்பதனோடே முடித்து, 'பிற தெய்வங்களை ஏத்தாமைக்கண் அச்சமின்றி நிற்பேன்" என்பது, அதனாற் போந்த கருத்தாக உரைப்பினும் ஆம். 6. பொ-ரை: நடுவு நிலைமையை உடையவனாகி வந்து, பொய்யை உடையவனும், நாய்போலும் அடியவனும், அழிவில் இன்பத்துள் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே, உண்மை
|