பக்கம் எண் :

641
 

கடையார் மாளிகைசூழ் கண

நாதனெங் காளத்தியாய்

உடையாய் உன்னையல்லால் உகந்

தேத்த மாட்டேனே.

3

 

262.மறிசேர் கையினனே மத

மாவுரி போர்த்தவனே

குறியே என்னுடைய குரு

வேஉன்குற் றேவல்செய்வேன்

நெறியே நின்றடியார் நினைக்

குந்திருக் காளத்தியுள்

அறிவே யுன்னையல்லால் அறிந்

தேத்த மாட்டேனே.

4



பொருந்தும் அந்தணனே, ஒளிவிடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே, அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே; பூதகண நாதனே, என்னை உடையவனே, அடியேன், உன்னையல்லது, பிறரை விரும்பிப் போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: "கடைஆர்" என்ற விதப்பினால், அழகென்னும் சிறப்புப் பெறப்பட்டது.

4. பொ-ரை: மான் கன்று பொருந்திய கையை உடையவனே. மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே, யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே, என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே, அடியவர்கள் நன்னெறிக் கண்ணே நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற அறிவுருவனே, அடியேன் உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; உனது சிறு பணி விடைகளையே செய்வேன்; ஆதலின், எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: 'சிறு பணிவிடைகளைச் செய்வேன்' என்றது, 'பெரும் பணிகளைச் செய்யும் தகுதியுடையேனல்லேன்' எனத் தமது சிறுமையைத் தெரிவித்துக்கொண்டபடி. 'நெறியே நின்னடியார்' என்பதும் பாடம்.