பக்கம் எண் :

640
 
260.இமையோர் நாயகனே இறை

வாஎன் இடர்த்துணையே

கமையார் கருணையினாய் கரு

மாமுகில் போன்மிடற்றாய்

உமையோர் கூறுடையாய் உரு

வேதிருக் காளத்தியுள்

அமைவே யுன்னையல்லால் அறிந்

தேத்த மாட்டேனே.

2

 

261.படையார் வெண்மழுவா பக

லோன்பல் லுகுத்தவனே

விடையார் வேதியனே விளங்

குங்குழைக் காதுடையாய்



வேண்டும்' என்பது குறிப்பெச்சம். செண்டு, குதிரையின் நடை; அஃது இங்கு விரைவைக் குறித்தது. கண்டார் காதலித்தலை, கண்ணப்ப நாயனாரது வரலாற்றினால் உணர்க; 'மேவினார் பிரியமாட்டா விமலனார்' (தி. 12 கண்ணப்பர் புரா. 174) என்றருளியதும் அறியற்பாற்று. "காதலிக்கும்" என்பது உடம்பொடு புணர்த்த லாகலானும், "எம்" என்பது, "காளத்தியாய்" என்பதன் இறுதி நிலையுடன் முடிந்தமையாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது. ஏகாரம் தேற்றம்.

2. பொ-ரை: தேவர்கட்குத் தலைவனே, கடவுளே, என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே, பொறுமை நிறைந்த அருளையுடையவனே, கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே, திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன்னை யன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன்; ஆதலின், எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும்.

கு-ரை: "இடர்த்துணையே" என்றதனை, "துன்பத்திற்கு யாரே துணையாவார்" (குறள் - 1299) என்றதுபோலக் கொள்க. 'அவ்வுரு' என்பது, "ஆயுரு" என வந்தது, செய்யுள் முடிபு. (தொல். எழுத்து - 208) "அமைவு" என்றது, தொழிலாகு பெயர்.

3. பொ-ரை: படைக்கலமாகப் பொருந்திய வெள்ளிய மழுவை உடையவனே, சூரியனது பல்லை உதிர்த்தவனே, இடபத்தின்கண்