27. திருக்கற்குடி பதிக வரலாறு: தம்பிரான்தோழர் திருவெஞ்சமாக்கூடல் பணிந்து நெடுந்தூரம் கடந்து கற்குடியில் விழுமியாரைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 92-93) குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவரைப் பல படியாக ஏத்தி, அவர் பால் அபயம் வேண்டி அருளிச்செய்தது. பயம், உலகியலால் தோன்றிற்று என்க. பண்: நட்டராகம் பதிக எண்: 27 திருச்சிற்றம்பலம் 269. | விடையா ருங்கொடியாய் வெறி | | யார்மலர்க் கொன்றையினாய் | | படையார் வெண்மழுவா பர | | மாய பரம்பரனே | | கடியார் பூம்பொழில்சூழ் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | அடிகே ளெம்பெருமான் அடி | | யேனையும் அஞ்சலென்னே. | | 1 |
1. பொ-ரை: இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள். கு-ரை: "பரம்" என்றது, 'யாவரினும் தீர மேலானவன்' என்பதனையும், "பரம்பரன்" என்றது, 'மேலவர்க்கு மேலானவன்' என்பதனையும் குறித்தன. "அடியேனையும்" என்ற உம்மை, தேவர் முதலாயினாரை அவர்தம் அல்லற் காலத்தில், 'அஞ்சலீர்' என்று சொல்லி உய்யக்கொண்டமையைத் தழுவிநின்றது. 'அஞ்சலை'
|