பக்கம் எண் :

650
 
270.மறையோர் வானவருந் தொழு

தேத்தி வணங்கநின்ற

இறைவா எம்பெருமான் எனக்

கின்னமு தாயவனே

கறையார் சோலைகள்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

அறவா அங்கணனே அடி

யேனையும் அஞ்சலென்னே.

2

 

271.சிலையால் முப்புரங்கள் பொடி

யாகச் சிதைத்தவனே

மலைமேல் மாமருந்தே மட

மாதிடங் கொண்டவனே



என்பது ஈற்று ஐகாரம் கெட்டு நின்றது. 'அஞ்சல்' எனல் தேற்றற் பொருளதாகலின், புகழ்தல் முதலியனபோல இரண்டாவதற்கு முடிபாகும் என்க. சுவாமிகள், இங்ஙனம் வேண்டினமையாற் போலும், இத்தலம், 'உய்யக்கொண்டான்' என வழங்குகின்றது.

2. பொ-ரை: அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள்.

கு-ரை: "மறையோர் வானவர்" என்பது, உயர்திணைப் பன்மைப் பெயர்க்கண் வந்த உம்மைத்தொகையாதலின் ஒருசொல்லாய் நிற்க, அஃது இறுதிக்கண் சிறப்பும்மை ஏற்றது. அன்றி எண்ணும்மையாக்கி, அது, 'மறையோர்' என்புழித் தொகுத்தலாயிற்று எனலுமாம். கண்ணுக்கு அழகாவது, மிக்க கருணை.

3. பொ-ரை: வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே,