273. | சந்தார் வெண்குழையாய் சரி | | கோவண ஆடையனே | | பந்தா ரும்விரலாள்ஒரு | | பாக மமர்ந்தவனே | | கந்தார் சோலைகள்சூழ் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | எந்தாய் எம்பெருமான் அடி | | யேனையும் ஏன்றுகொள்ளே. | | 5 |
274. | அரையார் கீளொடுகோ வண | | மும்மர வும்மசைத்து | | விரையார் கொன்றையுடன் விளங் | | கும்பிறை மேலுடையாய் | | கரையா ரும்வயல்சூழ் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | அரையா எம்பெருமான் அடி | | யேனையும் அஞ்சலென்னே. | | 6 | | |
பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள். கு-ரை: 'சந்தம், கந்தம்' என்பன, அம்முக் குறைந்து நின்றன. குழை சங்கினாலாயதாகலின் வெளிதாயிற்று. கோவண ஆடையாவது, உடையைக் கீழால் வாங்கி உடுப்பது. துகிலின் மிகுதியாலும் மென்மையாலும் சரிதல் உளதாயிற்று. 6. பொ-ரை: அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். கு-ரை: வெற்றரையாயிருத்தல் துறந்தோர்க்கும் நிரம்பாதென்றற்கு,
|