பக்கம் எண் :

653
 
275.பாரார் விண்ணவரும் பர

விப்பணிந் தேத்தநின்ற

சீரார் மேனியனே திகழ்

நீல மிடற்றினனே

காரார் பூம்பொழில்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

ஆரா இன்னமுதே அடி

யேனையும் அஞ்சலென்னே.

7

 

276.

நிலனே நீர்வளிதீ நெடு

வானக மாகிநின்ற

புலனே புண்டரிகத் தயன்

மாலவன் போற்றிசெய்யும்

கனலே கற்பகமே திருக்

கற்குடி மன்னிநின்ற

அனல்சேர் கையினனே அடி

யேனையும் அஞ்சலென்னே.

8



'அரையார் கீளொடு கோவணமும் அரைக்கசைத்து' என்றருளினார் என்க. "கோவணமும்" என்ற உம்மை, எச்சம்.

7. பொ-ரை: மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.

கு-ரை: "பாரார்" என்பதில், எண்ணும்மை தொகுத்தலாயிற்று. 'பாரோர்' என்பதும் பாடம்.

8. பொ-ரை: நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே,