277. | வருங்கா லன்னுயிரை மடி | | யத்திரு மெல்விரலால் | | பெரும்பா லன்றனக்காய்ப் பிரி | | வித்த பெருந்தகையே | | கரும்பா ரும்வயல்சூழ் திருக் | | கற்குடி மன்னிநின்ற | | விரும்பா எம்பெருமான் அடி | | யேனையும் வேண்டுதியே. | | 9 |
திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். கு-ரை: "நிலனே" என்னும் எண்ணேகாரம், நீர் முதலியவற்றோடும் இயைந்தது. அவ்வெண்ணின் தொகையும், "அயன் மாலவன்" என்னும் செவ்வெண்ணின் தொகையும் தொகுத்தலாயின. "கனலே" என்றது மூன்றாமெழுத்தெதுகையாய்வர, அதன்பின், "அனல் சேர்" என, இரண்டாமெழுத்தெதுகையாய் வந்தது. னகர உயிர்மெய்யின்முன் வந்த லகர ஏகாரமும், லகர மெய்ம்முன வந்த சகர ஏகாரமும் ஒருவாற்றான் எதுகை நயத்தைத் தோற்றுவித்து நின்றன. இத்தலத்தில் இறைவருக்கு, "கற்பகநாதர்" என்ற ஒரு பெயரும் வழங்கிவருதல், இங்கும்' "கற்பகமே" என்றும், ஆறாந் திருமுறையுள்ளும் (தி. 6 ப. 60) "கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்றும் அருளினமையோடு வைத்து நோக்கற் பாலது. 9. பொ-ரை: பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள். கு-ரை: "திரு" என்றது, விடாத ஆகுபெயராய், திருவடியை உணர்த்திற்று. கூற்றுவனை மாய்த்தற்கு திருவடி விரலே அமையுமாதலின், 'காலால்' என்னாது, "திரு மெல்விரலால்" என்று அருளிச் செய்தார். மேலும் இவ்வாறு அருளிச் செய்தமை காண்க. மென்மை கூறியதும், கூற்றுவனது சிறுமை உணர்த்தற்பொருட்டு என்க. யாண்டினாற்
|