278. | அலையார் தண்புனல்சூழ்ந் தழ | | காகி விழவமரும் | | கலையார் மாதவர்சேர் திருக் | | கற்குடிக் கற்பகத்தைச் | | சிலையார் வாணுதலாள் நல்ல | | சிங்கடி யப்பனுரை | | விலையார் மாலைவல்லார் வியன் | | மூவுல காள்பவரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
சிறியனாயினும், தவத்தாற் பெரியோன் என்பார், "பெரும் பாலன்" என்றும், அவன் பெருமைக்கு ஏற்ப அருளினை என்பார், "பெருந்தகையே" என்றும் அருளினார். இதனானே, கூற்றுவனது அறியாமையும் புலப்படுத்தப் பட்டது. 'நம்பன்' என்னும் பெயரைப் பொருள்பற்றி, "விரும்பா" என்று அருளினார். 'விரும்பத் தக்கவன்' என்பது பொருள். 10. பொ-ரை: அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர். கு-ரை: 'சிங்கடி' என்பாள், கோட்புலி நாயனார் மகள். அவளை நம்பியாரூரர் தம் மகளாக ஏற்றுக்கொண்டமையைப் பெரிய புராணத்துட் காண்க. (தி. 12 ஏ. கோ. புரா. 39).
|