28. திருக்கடவூர் வீரட்டம் பதிக வரலாறு: நம்பியாரூரர் திருநள்ளாற்றமுதைத் தொழுது திருக்கடவூர் அணைந்து வீரட்டேசுவரரை வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம் (தி. 12 ஏயர்கோன். புரா. 145) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானைத் திருக்கடவூர் வீரட்டானத்திற் கண்டபொழுது, 'காலனைக் காய்ந்து பாலனைக் காத்த இப்பெருமானையன்றி நமக்குத் துணையாவார் யாவர்' என்றெழுந்த உணர்வினால் அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 28 திருச்சிற்றம்பலம் 279. | பொடியார் மேனியனே புரி | | நூலொரு பாற்பொருந்த | | வடியார் மூவிலைவேல் வள | | ரங்கையின் மங்கையொடும் | | கடியார் கொன்றையனே கட | | வூர்தனுள் வீரட்டத்தெம் | | அடிகேள் என்னமுதே எனக் | | கார்துணை நீயலதே. | | 1 |
1. பொ-ரை: திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே, புரியாகிய நூல், ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற்பொருந்தி விளங்க, கூர்மை பொருந்திய முத்தலை வேல் (சூலம்) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லது வேறு யார் துணை! கு-ரை: 'வளர் கங்கையின்' எனப் பாடம் ஓதுவாரும் உளர். "அங்கையின்" என்றது, "கொன்றையன்" என்பதன் இறுதிநிலையோடு முடிந்தது. ஆண்டு, ஐயுருபு கெட இன்சாரியை நின்றது. உம்மை சிறப்பு. "என்னமுது", என்றது, 'எனக்கு உரியதாகக் கிடைத்த அமுது'
|