பக்கம் எண் :

657
 
280.பிறையா ருஞ்சடையாய் பிர

மன்தலை யிற்பலிகொள்

மறையார் வானவனே மறை

யின்பொரு ளானவனே

கறையா ரும்மிடற்றாய் கட

வூர்தனு் வீரட்டத்தெம்

இறைவா என்னமுதே எனக்

கார்துணை நீயலதே.

2



என்றதாம். மிருத்துவைக் கடப்பித்த பெருமானாகலின், "அமுதே என்று" ஈண்டுப் பலவிடத்து அருளிச்செய்தார். அட்ட வீரட்டத்துள் இத்தலம், காலனைக் கடந்த வீரட்டமாதல் அறிக. இதனைச் சுவாமிகள் இத் திருப்பதிகத்து மூன்றாம் திருப்பாடலுள் எடுத்தோதியருளினார். திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிருத்தத் திருப்பதிகம் முழுவதிலும், பிற திருப்பதிகங்களுட் சில திருப்பாடல்களிலும் எடுத்தோதியருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பதிகத்து இரண்டாம் திருப்பாடலில் எடுத்தோதியருளினார். இனி, இத்திருத்தலப் பெருமானுக்கு, 'அமுதகடேசர்' எனப் பெயர் வழங்குதல், இத்திருப்பதிகத்துள் ஒன்றொழித்து ஏனைய திருப்பாடல்கள் எல்லாவற்றிலும், "என் அமுதே" என்று அருளிச் செய்ததனோடு வைத்து உணரற்பாலது. இப்பெயர்க்குப் புராணம் வேறாகக் கூறுப. 'யாவர்' என்பதன் திரிபாகிய யார் என்பது, 'ஆர்' என மருவிற்று.

2. பொ-ரை: பிறை பொருந்திய சடையை உடையவனே, பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற, வேதத்தை ஓதுகின்ற தேவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை?

கு-ரை: மறையை ஆர்த்தல் (ஓதுதல்), பலியேற்குமிடத்தில் என்க.

3. பொ-ரை: மான் கன்று பொருந்திய கையை உடையவனே, திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே, நீ, அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு