290. | ஆவியைப் போகாமே | | தவிர்த்தென்னை யாட்கொண்டாய | | வாவியிற் கயல்பாயக் | | குளத்திடை மடைதோறுங் | | காவியுங் குவளையுங் | | கமலஞ்செங் கழுநீரும் | | மேவிய குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 2 |
பேசுவர்; அஃது அவ்வாறாக, நீ, முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ! கு-ரை: "இத்தனை" என்றது, பொதிசோறும் தண்ணீர்ப் பந்தரும் கொண்டு மறையவன்போல வீற்றிருந்தமை முதலியன. 'பித்தரே என்றும்மை' என்பது, அறியாதார் திரித்தோதிய பாடம், 'மாணிக்கம்' என்புழியும் இரண்டனுருபு விரிக்க. 'முளைப்பித்து என்னும் பிற வினையுள் பி விகுதி தொகுத்தலாயிற்று. 'எழுந்த வித்தனே' என்றாராயினும், 'வித்தாய் எழுந்தவனே' என்பது கருத்தாகக் கொள்க. 'முத்து முதலியவற்றை முளைப்பிக்கும் வித்து' என்றது இல்பொருள் உவமை. அவ்வுவமையால், சிவபிரான் தன் அடியவர் கட்கு அரும்பெருஞ் செல்வமாய் இருத்தலைக் குறித்தருளியவாறு. "வெள்ளடை" என்றது, கோயிலின் பெயர்; அஃது ஆங்குள்ள இறைவற்கு ஆகி, விளியேற்றது. "அன்றே" என்றது தேற்றம். 2. பொ-ரை: வாவிகளில் கயல்மீன்கள் துள்ள, குளத்திலும், நீர்மடைகளிலும், கருங்குவளையும், செங்குவளையும், தாமரையும், செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய்! கு-ரை: ஆவியைப் போகாமே நிறுத்தியது, பொதிசோறும், தண்ணீரும் தந்து என்க. வாவி, பெருங்கிணறு. ஆட்கொள்ளுதல் ஈண்டு, உய்யக்கொள்ளுதல். "குளத்திடை", குளமாகிய இடம் என்க. "தோறும்" என்றதனை, "குளத்திடை" என்பதனோடும் கூட்டுக.
|