29. திருக்குருகாவூர் வெள்ளடை பதிக வரலாறு: சுந்தரர், திருக்கோலக்காவைத் தொழுது சீகாழியை வலங்கொண்டு திருக்குருகாவூர் செல்லும்பொழுது பசியினாலும் நீர் வேட்கையினாலும் மிகவும் வருந்தினார். அதனையுணர்ந்த பெருமான் நம்பியாரூரர் வரும் வழியில் தண்ணீரும் பொதி சோறும் கொண்டு குளிர்பந்தர் அமைத்து வேதியர் வடிவுடன் எழுந்தருளியிருந்தார். அடியவர் திருக்ககூட்டத்துடன் நம்பியாரூரர் வந்ததும் மறையவர், 'நீர் இப்போது பசியால் வாடுகின்றீர்; இதனை உண்ணும்' என்று கூறியளித்த பொதிசோற்றை அடியவர்களுடன் உண்டு நீரருந்தி உறங்கிப் பின் விழித்துப் பார்த்த சுந்தரர் தண்ணீர்ப்பந்தர் இல்லாததைக் கண்டு பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன் புரா. 155-163) குறிப்பு: இத் திருப்பதிகம், திருக்குருகாவூரில் இறைவன் தமக்குச் செய்த கருணையை அறிந்து, வியந்து அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 29 திருச்சிற்றம்பலம் 289. | இத்தனை யாமாற்றை | | யறிந்திலேன் எம்பெருமான் | | பித்தனே யென்றுன்னைப் | | பேசுவார் பிறரெல்லாம் | | முத்தினை மணிதன்னை | | மாணிக்க முளைத்தெழுந்த | | வித்தனே குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 1 |
1. பொ-ரை: எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன்; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, 'பித்தன்' என்று இகழ்ந்து
|