288. | காரா ரும்பொழில்சூழ் கட | | வூர்த்திரு வீரட்டத்துள் | | ஏரா ரும்மிறையைத் துணை | | யாஎழில் நாவலர்கோன் | | ஆரூ ரன்னடியான் அடித் | | தொண்ட னுரைத்ததமிழ் | | பாரோர் ஏத்தவல்லார் பர | | லோகத் திருப்பாரே. | | 10 |
திருச்சிற்றம்பலம்
எனக்கு நீயல்லாது வேறு யார் துணை! கு-ரை: "அயன்" இரண்டனுள் முன்னது முகமனாய் வந்த காரண இடுகுறியாயும், பின்னது உண்மையான் வந்த காரணக் குறியாயும் நின்றன. மாயையும் ஒளியுடையதாகலின், முன்னர் 'மேலான ஒளி' என்றது உயிரை என்க. கயம் - மடு; அது, மிக்க நீரை உணர்த்திற்று. 10. பொ-ரை: மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம்' என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து, அழகிய திருநாவலூரில் தோன்றியவனும், திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின், சிவலோகத்தில் இருத்தல் திண்ணம். கு-ரை: ஏர்தல் - எழுதல்; ஈண்டு, புலனாதல் என்னும் பொருட்டு, 'இறையையே' என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று 'ஆரூரன்' என்றது, திருவாரூர் இறைவனை. இவர்தம் தந்தையார்க்குத் தந்தையார் பெயரும், 'ஆரூரர்' எனக் குறிக்கப்படுதலின். திருவாரூர்ப் பெருமானே இவர்தம் குடிக்கு வழிபடு கடவுளாதல் பெறுதும். அதனால், அப்பெருமானுக்கு அடியவராகத் தம்மைக் குறித்தருளினார். "அடித்தொண்டன்" எனப் பின்னுங் கூறியது, தம் முன்னோர் போலத் திருநாவலூரில் வாழ்ந்து ஒரோவழி வந்து வழிபட்டு மீளாது, திருவாரூரிலே உறைந்து வழிபட்டமை பற்றி என்க. "ஏத்த வல்லார்" என்புழி, 'ஆயின்' என்று ஒரு சொல் வருவிக்க. ஏகாரம் - தேற்றம்.
|