பக்கம் எண் :

661
 
286.வேறா உன்னடியேன் விளங்

குங்குழைக் காதுடையாய்

தேறேன் உன்னையல்லாற் சிவ

னேஎன் செழுஞ்சுடரே

காறார் வெண்மருப்பா கட

வூர்த்திரு வீரட்டத்துள்

ஆறார் செஞ்சடையாய் எனக்

கார்துணை நீயலதே.

8


287.அயனோ டன்றரியும் மடி

யும்முடி காண்பரிய

பயனே யெம்பரனே பர

மாய பரஞ்சுடரே

கயமா ருஞ்சடையாய் கட

வூர்த்திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே எனக்

கார்துணை நீயலதே.

9



பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனே, உன் அடியவனாகிய யான், உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யார் துணை!

கு-ரை: "வேறு" என்றவிடத்து, 'உளர்' என்பது எஞ்சிநின்றது. 'கடவுளர்' என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. 'காறை' என்பதன் ஐகாரம் தொகுக்கப்பட்டது. இப்பெயர்த்தாயதோர் அணிகலம் கழுத்தில் அணியப்படுவது என்பதனை, "கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே" (தி. 6 ப. 4 பா. 3.) என்றருளியவாற்றால் அறிக. மருப்பு, மாயோன் அவதாரமாகிய வராகத்தினது என்க.

9. பொ-ரை: முன்னொரு ஞான்று, பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே, எங்கள் கடவுளே, மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே, மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே, திருக்கடவூரின்கண் உள்ள, 'திருவீரட்டானம், என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பிறப்பில்லாதவனே' என்னுடைய அமுதம் போல்பவனே,