| கண்ணா ருண்மணியே கட | | வூர்தனுள் வீரட்டத்தெம் | | அண்ணா என்னமுதே | | எனக் கார்துணை நீயலதே. | | 6 |
285. | எரியார் புன்சடைமேல் இள | | நாக மணிந்தவனே | | நரியா ருஞ்சுடலை நகு | | வெண்டலை கொண்டவனே | | கரியா ரீருரியாய் கட | | வூர்தனுள் வீரட்டத்தெம் | | அரியாய் என்னமுதே எனக் | | கார்துணை நீயலதே. | | 7 |
உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை! கு-ரை: 'கண் உள் ஆர் மணியே' என்க. 'கண்ணாரும் மணியே' என்பதும் பாடம். 7. பொ-ரை: தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே, நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள, சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே, யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே, திருக்கடவூரினுள், 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, எங்கள் அரிய பொருளானவனே, என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யார் துணை! கு-ரை: "இளநாகம்" என்றதில், இளமை, வலியின்மையைக் குறித்தது. வலியாவது கலுழனை வெல்லும் ஆற்றல். 8. பொ-ரை: ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே, சிவனே, என்னுடைய செம்மையான விளக்கே, காறையாகப்
|