283. | மையார் கண்டத்தினாய் மத | | மாவுரி போர்த்தவனே | | பொய்யா தென்னுயிருட் புகுந் | | தாய் இன்னம் போந்தறியாய் | | கையார் ஆடரவா கட | | வூர்தனுள் வீரட்டத்தெம் | | ஐயா என்னமுதே எனக் | | கார்துணை நீயலதே. | | 5 |
284. | மண்ணீர் தீவெளிகால் வரு | | பூதங்க ளாகிமற்றும் | | பெண்ணோ டாணலியாய் பிற | | வாவுரு வானவனே |
கு-ரை: "போர்த்து" என்ற வினையெச்சம், எண்ணின்கண் வந்தது. "பொன்மேனியின்மேல்" என்றது, யானைத் தோலினது இழி புணர்த்தி, அது போர்க்கலாகாமையைத் தோற்றுவித்து நின்றது. 5. பொ-ரை: கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே யானையின் தோலைப் போர்த்தவனே, கையின்கண் பொருந்திநிற்கும் படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே, திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே, என்னுடைய அமுதம்போல்பவனே, நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய்; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந் தறியாய்; ஆதலின், எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை! கு-ரை: தப்பாது புகுந்தமையாவது, எல்லாப் பொருளிலும் புகுந்தவன், தம் உயிரை யாதானுமோராற்றால் ஒழிந்துவிடாது, அதன் கண்ணும் புகுந்தமை. இயல்பாகவே நிறைந்து நின்றமையை, ஒருகாலத்துப் புகுந்ததுபோல அருளினார், வியப்பினால் என்க. "என் உயிர்" என்றதனை, 'இராகுவினது தலை' என்பதுபோலக் கொள்க. 6. பொ-ரை: 'நிலம், நீர், தீ, காற்று, வானம்' என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும், அப் பூதங்களாலாகிய, 'பெண், ஆண், அலி' என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று, நீ உருவங்கொள்ளுமிடத்து, யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே, கண்ணின்
|