291. | பாடுவார் பசிதீர்ப்பாய் | | பரவுவார் பிணிகளைவாய் | | ஒடுநன் கலனாக | | உண்பலிக் குழல்வானே | | காடுநல் லிடமாகக் | | கடுவிருள் நடமாடும் | | வேடனே குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 3 |
292. | வெப்பொடு பிணியெல்லாந் | | தவிர்த்தென்னை யாட்கொண்டாய் | | ஒப்புடை யொளிநீலம் | | ஓங்கிய மலர்ப்பொய்கை | | அப்படி யழகாய | | அணிநடை மடவன்னம் | | மெய்ப்படு குருகாவூர் | | வெள்ளடை நீயன்றே. | | 4 |
3. பொ-ரை: தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க, உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே, காடே சிறந்த அரங்காய் இருக்க, செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும், பிறவாற்றால் துதிக்கின்றவரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து, நோயைப் பற்றறுப் பாயன்றோ! கு-ரை: உவகை மீதூர்வால், பாடுவாரையும் பரவுவாரையும், அவர்கட்குச் செய்யும் திருவருள் வகைகளையும் வேறு வேறுபோல அடுக்கி ஓதி வியந்தார். இதனை வருகின்ற திருப்பாடலை நோக்கியும் அறிக. பாடுவார் பசியைத் தீர்த்தல் தம்மிடத்து வெளியாய் நிகழ்ந்தமை அறிந்து அருளிச் செய்தவாறு. "காடு" என்றதற்கு ஏற்ப, "வேடன்" என்றது, ஓர் நயம். 'காடுநின் னிடமாக' என்பதும் பாடம். 4. பொ-ரை: ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற, மலர்களையுடைய பொய்கைகளில், மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற, அழகிய நடையையுடைய
|