| கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங் | | கொகுடிக் கோயில் | | அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக் | | கினிய வாறே. | | 5 |
304. | பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப் | | பூசை செய்து | | கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் | | கருப்ப றியலூர்க் | | கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங் | | கொகுடிக் கோயில் | | ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் | | கினிய வாறே. | | 6 |
வீசுகின்ற பூப் பொய்கைகளில் கயல் மீனும், வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள, கொடிப் பூக்களில், 'வண்டு' என்றும், 'தேன்' என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: 'வண்டு, தேன்' என்பன, தேனீக்களின் வகை. தேனினது தண்மையால், வண்டும் தண்ணிதாயிற்று. 'அடியேறுகழலான்' என்பது, ஒரு பெயர்த்தன்மைத்தாய் நின்றது. 6. பொ-ரை: பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திருநீற்றை அணிந்து, 'போற்றி' எனச் சொல்லிப் பல வகை வழிபாடுகளையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள, கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ, அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: "பொய்யாத வாய்மை" என மிகுத்தோதியருளியது, 'மறந்தும் பொய்கூறாத' எனத் தாம் வேண்டிய சிறப்பினை விளக்குதற்
|