பக்கம் எண் :

678
 
305.செடிகொள்நோய உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச்

சிந்தை செய்ம்மின்

கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங்

கருப்ப றியலூர்க்



பொருட்டு. "வாய்மையாற் பொடி பூசி" என்றருளியது, அத்தகையோரது உள்ளமே திருநீற்றின விழைதல் பற்றி; "பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்" என்றருளினார், சேக்கிழார் நாயனாரும் (தி. 12 திருக் கூட்டச் சிறப்பு-6.). இதனானே, "மனத்தது மாசாக" என்னும் திருக்குறளில், (278) 'மாண்டார் நீறாடி' என்பதே பாடம் என்பாரது கூற்றும் பொருந்துவதேயாம்; என்னையெனின். 'நீராடி' என்பது, "மாண்டார்" என்றதனோடு இனிது இயையாமையின் என்க. அங்ஙனமாயின், பொதுநூல் செய்தாரை இவ்வாறு ஒருபாற் சார்ந்து கூறினாராக உரைத்தல் பொருந்துமோ எனின், நீர் பலகால் மூழ்கல், சோர்சடை தாழக் கொள்ளுதல் முதலியனபோல நீறணிதலும் தாபதர் அனைவர்க்கும் ஒருபடித்தாய் உரித்தெனக் கொள்ளப்படுமாதலின். "மழித்தலும் நீட்டலும் வேண்டா" (குறள் - 280.) என்றாற்போல, இதனையும் கூறினார் என விடுக்கப்படும் என்க. "இடுநீற்றாற் பையவிந்த நாகம் போல்" (நாலடி - 66.) எனப் பிறரும் நீற்றினை எடுத்தோதியது உணர்தற்பாலது. இவையெல்லாம் பற்றியே, "மந்திரமாவது நீறு" எனவும், "தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு" எனவும் திரு மொழிகள் எழுந்தன (தி. 2 ப. 66 பா. 1) என்க. "கையினால்" என மிகுத் தோதியருளியது, அவர் கைப்பணி செய்தற்கண் தளராது நிற்றலை உணர்த்தற்கு. "கொய்" என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஆகுபெயராய், அதனையுடையார்மேல் நின்றது எனினுமாம். இங்கு.

"கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆருரரை"

(தி. 4 ப. 5 பா. 1)

என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழி நினைக்கத்தக்கது. "நமக்கு" என்றது, தம்போல்வாரையும் உளப்படுத்ததாகலின், பால் வழு இன்றென்க. இத் திருப்பாடலுள், அறநெறி நிற்றலால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது.

7. பொ-ரை: நறுமணத்தைக் கொண்ட பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும்