பக்கம் எண் :

679
 
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங்

கொகுடிக் கோயில்

அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.

7


306.பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்

பாடி யாடிக்

கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன்

கருப்ப றியலூர்க்

குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத

கொகுடிக் கோயில்

உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.

8



அழகிய நுண்ணிய இடையினையும், வரிசையான வளைகளையும் உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது; ஆதலின், துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும், தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள்.

கு-ரை: "தடம்" ஆகுபெயர். இத் திருப்பாடலுள் இறைவரை நினைவார்க்கு வரும் பயன் அருளப்பட்டது.

8. பொ-ரை: கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடையவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை, நாம், நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும், ஆடியும் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.

கு-ரை: "மறைநாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில்" என்றது, இங்கு அந்தணரது வழிபாடு நிகழ்தற் சிறப்பினை அருளியவாறு. இத் திருப்பாடலுள், பாடி ஆடி வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது.