பக்கம் எண் :

680
 
307.சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந்

தன்மை காணாக்

கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக்

கருப்ப றியலூர்க்

கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங்

கொகுடிக் கோயில்

எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.

9


308.பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப்

பாடி யாடிக்

கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக்

கருப்ப றியலூர்க்

குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங்

கொகுடிக் கோயில்

எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.

10



9. பொ-ரை: சங்கினை ஏந்துகின்ற கையினை யுடையவனாகிய திருமாலும், தாமரைமலர்மேல் இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத, கங்கை பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும், இடபத்தை ஊர்பவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள, தேன் நிறைந்த பொழிலாகிய சோலைகள், சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.

கு-ரை: 'கங்கை' என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று. "கொங்கார்ந்த பொழில்" என்பது சிறப்புப் பெயராய், "சோலை" என்பதன் பொதுமையை நீக்கி, அதற்கு அடையாய் நின்றது. மாலயனுக்கும் அரியவனாகிய அவன் தமக்கு இனியனாயினமை அருளப்பட்டது.

10. பொ-ரை: கண்டவரது கண்கள் குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும், களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற சமணராலும்,