309. | கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் | | கருப்ப றியலூர்க் | | குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் | | கொகுடிக் கோயில் | | இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய் | | தின்ப மெய்தி | | மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த | | வண்ட மிழ்களே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
புத்தராலும் புறங்கூறப்படுகின்ற, எட்டுத் தோள்களையுடைய எம்பெருமானை, நாம், பல நாள்களும் உள்ளத்திற் கருதி, பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை, கூட்டுவார் கூட்டப் பல இசைப் பாடல்களைப் பாடியும், ஆடியும் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: "குளிரும், களி" என்னும் அடைமொழிகளை கமுகஞ் சோலக்கும், பூஞ்சோலைக்கும் நிரலே கொடுக்க. "சோலை" என்றதனை, "கமுகு" என்றதனோடும் கூட்டுக. பூஞ்சோலையில் தேன் உளதாகலின், களிப்புக் கூறப்பட்டது. 'கனிக் கமுகம்' எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். கீழ்மைத் தொழில்கள், வைதிகரை இகழ்தல் பகைத்தல் முதலியன. 'புறங்கூறுங் கோயில்' என இயைக்கலாகாமை உணர்க. 11. பொ-ரை: திருக்கருப்பறியலூரில் உள்ள, குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும், தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை, 'வனப் பகை' என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து, அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே, தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும். கு-ரை: 'வேறு வேண்டா' என்பதாம். இது தமிழ்மாலை யாதலின் இதனைக் கற்றற்கு உரியாரும், கற்றோரும் தமிழ்ப்புலவ ராவர் என்றற்கு. "தென்புலவர்" என்று அருளிச்செய்தார். மொழியது நில எல்லை, அதனைக் கற்றார்க்கு உரித்தாக்கப்பட்டது. கற்றோராகிய புலவர் என மாறிக் கூட்டுக.
|