பக்கம் எண் :

682
 

31. திருஇடையாறு

பதிக வரலாறு:

சுந்தரர், நாவலூரில், "கோவலன் நான்முகன்" என்னும் திருப்பதிகம் பாடிய அமையத்தில் பாடியருளியதாகலாம் இத் திருப்பதிகம். இதன் வரலாறு கிடைத்திலது.

குறிப்பு: இத்திருப்பதிகம், 'திருஇடையாறு' என்னும் தலத்தில் இறைவரைக் கண்டு வணங்கிய ஞான்று, அதனுடன் இடைமருதையும் இணைத்து, ஏனைய தலங்களையும் தொகுத்து அருளிச் செய்தது. 'இடைமருது' என்பது இடையாற்றில் உள்ள கோயிலின் பெயர் என்பாரும் உளர். அவ்வாறாயின், 'இடையாற்றிடை மருது' என, றகரம் இரட்டித்தல் வேண்டும்.

பண்: கொல்லி

பதிக எண்: 31

திருச்சிற்றம்பலம்

310.முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தை யூர்நன்று சென்றடை வான்திரு வாரூர்
பந்தை யூர்பழை யாறு பழனம்பைஞ் ஞீலி
எந்தையூ ரெய்த மானிடை யாறிடை மருதே.

1



1. பொ-ரை: அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும், எம் தந்தையும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'பழைய ஊராகிய முதுகுன்றம், குரங்கணின்முட்டம், ஆரூர், மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.

கு-ரை: முதுகுன்றம் ஆதலின், "முந்தையூர்" என அருளினார். "ஆரூர்" என்றதில் உள்ள, "திரு" என்றதை எல்லாத் திருப்பாடல்களிலும் உள்ள ஊர்ப்பெயர்களில் வேண்டுவனவற்றோடு கூட்டுக. "பந்தை" என்ற ஐகாரம். சாரியை. சில தலங்களில் இறைவனை, 'கற்பகம், மாணிக்கம், அமுது' எனக் குறித்தருளுதல் போல, இடையாற்றில், "எய்தமான்" எனக் குறித்தருளினார். 'அம்மான்' என்பது, இடைக்குறைந்து நின்றது. 'எய்தம்மான்' என்பதே பாடம் எனலுமாம். "முந்தையூர், பந்தையூர்" என்பவற்றை வைப்புத் தலங்களின்