311. | சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர் ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப் பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர் எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே. | | 2 |
312. | கடங்க ளூர்திருக் காரி கரைகயி லாயம் விடங்க ளூர்திரு வெண்ணிஅண் ணாமலை வெய்ய படங்க ளூர்கின்ற பாம்பரை யான்பரஞ் சோதி இடங்கொ ளூரெய்த மானிடை யாறிடை மருதே. | | 3 |
பெயர்கள் என்பாரும் உளர். 1பழையாறு, வைப்புத் தலம். 2. பொ-ரை: இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும், பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'அடியார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர், ஊறல், பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: "தொண்டர்" என்றதனைச் "சுற்றும்" என்றதற்குங் கூட்டுக. "பாதி" என்றது, முன்னர் அவ்வளவினதாகிய உடம்பினையும், பின்னர் அதனையுடையவனையும் குறித்தலின், இருமடியாகு பெயர். 3. பொ-ரை: கொடிய, படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள், 'செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே. கு-ரை: 'கடங்களூர், விடங்களூர்' என்பன வைப்புத்தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர். காரிகரை, வைப்புத்தலம். 'காரிக் கரை, இடங்களூர்' எனவும் பாடம் ஓதுவர்.
1. திருமயிலைச் செந்தில்வேலு முதலியார் தலவரிசை அடங்கன் முறைப் பதிப்பில் உள்ள வைப்புத் தலங்களின் பட்டியலைக் காண்க.
|