343. | நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல் | | நடுங்கி நிற்கும்இக் கிழவனை | | வரைகள் போல்திரள் தோள னேயென்று | | வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை | | புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக | | லூரைப் பாடுமின் புலவீர்காள் | | அரைய னாய்அம ருலகம் ஆள்வதற் | | கியாதும் ஐயுற வில்லையே. | | 4 |
இல்லாதவனை, 'நண்பரையும், நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன்' என்றும், தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை விதிராதவனை, 'விருந்தினரை நன்கு புறந்தருவோன்' என்றும் பொய் சொல்லிப் பாடினும், நீவிர் வேண்டுவதனை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ, வயற் பறவைகள் ஒலிக்கின்ற, தண்ணிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகமாகிய தேர்க்கு அச்சாணியாய் நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற்காரணம் யாதும் அறுதியாக இல்லை. கு-ரை: மேலைத் திருப்பாடலில் ''மிடுக்கிலாதானை, கொடுக்கிலாதானை'' என்றருளினமையானும், பின்னும் அவ்வாறு அருளிச் செய்தலானும், ஈண்டும் இவ்வாறுரைத்தல் திருவுள்ளமாயிற்று. ''பேணி'' என்றது, பெயர். 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' (குறள்-1032) என்புழியும், 'ஆணி' என்பது இப்பொருட்டாதல் உணர்க. 4. பொ-ரை: மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று, மூப்பெய்தி, உடல் நடுக்கங் கண்டு, கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய கிழவனை, 'மலைகள் போலத்திரண்ட தோள்களையுடைய காளையே' என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. கு-ரை: தளர்தலுக்கு, 'கால்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. சுட்டு, தன்மையைக் குறித்தது. ''தோளனே'' என்னும் ஏகாரத்தைத் தேற்றமாகவும், விளியாகவும் இரட்டுற மொழிந்து கொள்க. இது,
|