342. | காணி யேற்பெரி துடைய னேகற்று | | நல்ல னேசுற்றம் நன்கிளை | | பேணி யேவிருந் தோம்பு மேயென்று | | பேசி னுங்கொடுப் பாரிலை | | பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண் | | புகலூர் பாடுமின் புலவீர்காள் | | ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற் | | கியாதும் ஐயுற வில்லையே. | | 3 |
அருளியது, பலர்க்கு உரிய தன்மையை ஒருவன்மேல் வைத்துக் கூறியவாறு; என்னை? ''ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப'' (தொல்-பொருள்-222) என்பது இலக்கணமாகலின். இதனானே பால்வழுவும் இன்றாயிற்று. ''என்று'' என்றதை முன்னவற்றோடுங் கூட்டிச் செவவெண்ணாக்குக. ''வில்லுக்கு விசயன்'' என்றமையான், ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைக்கப்பட்டன. ''கொடுப்பாரிலை'' என்றதனை ஒரு சொல்லாக்கி, 'கொடார்' என்பது அதன் பொருளாக உரைப்பாரும் உளர். அஃது அப்பொருளதாயின், 'கொடுப்பாரலர்' என வருதலல்லது, இவ்வாறு வாராமை மேலும், அதற்கு எழுவாயின்மையும் உணர்க. ''பொடிக்கொள்'' என்றதில் உள்ள ககரமெய், விரித்தல். 'அடுக்கிற்கு' என்னும் நான்காவது, தொகுத்தல். ''மேல்'' என்றது, மேல் உள்ளதனை உணர்த்திற்று. அன்றி, 'உள்ள' என்பது எஞ்சி நின்றது எனலுமாம். 'அமரர்' என்பது இடைக்குறைந்து நின்றது. 'அமரர்' என்பது, முகமனாய்த் தேவரை உணர்த்தல் உலகியல் வழக்காயினும், உண்மையாய், அபர முத்தரை உணர்த்தல் மெய்ந்நெறி வழக்கென்க. மேலைத் திருப்பாடலில் ''சிவலோகம்'' என்றதனையே பின்னர் இவ்வாறு அருளுதலின், இதற்குப் பிறிது பொருள் கூறல் பொருந்தாமையறிக. 3. பொ-ரை: புலவர்காள், நிலம் சிறிதும் இல்லாதவனை, 'காணியோ பெரிதுடையன்' என்றும், கல்வியில்லாத பேதையை, 'கற்று நலம் பெற்றவன்' என்றும், ஒருவரோடும் அளவளாவுதல்
|