344. | வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப் | | பாவி யைவழக் கில்லியைப் | | பஞ்ச துட்டனைச் சாது வேயென்று | | பாடி னுங்கொடுப் பாரிலை | | பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக | | லூரைப் பாடுமின் புலவீர்காள் | | நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற் | | கியாதும் ஐயற வில்லையே. | | 5 |
345. | நலமி லாதானை நல்ல னேயென்று | | நரைத்த மாந்தனை யிளையனே | | குலமி லாதானைக் குல னேயென்று | | கூறி னுங்கொடுப் பாரிலை |
பின்வருவனவற்றிற்கும் ஒக்கும். ''அரையன்'' என்றது, பன்மையொருமை மயக்கம். தலைவர் ஒருவரேயாதலின், அந்நிலையினை, காலத்தான் ஒருவர் ஒருவராக எய்துவர் என்றற்கு இவ்வாறு அருளினார். பன்மையாக அருளிய வழியும் இதுவே பொருளாகலின், 'அரையராய்' என்பதே பாடம் எனினுமாம். 5. பொ-ரை: புலவர்காள், வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும், பெரும்பொய்யனும், பாவத்தொழிலை உடையவனும், நீதி இல்லாதவனும், பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும் ஆகியவனை, 'சான்றோனே' என்று உயர்த்திப் பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பொன்போலும் சிவந்த சடையினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம் அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. கு-ரை: 'பஞ்ச' என்னும் எண்ணுப்பெயர், அவ்வளவினதாகிய வகையைக் குறித்தது. 6. பொ-ரை: புலவர்காள், அழகில்லாதவனை, 'அழகுடையவனே' என்றும், முழுதும் நரை எய்திய கிழவனை, 'இளையவனே' என்றும் இழிகுலத்தவனை, 'உயர்குலத்தவனே' என்றும் மாறிச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில்
|