பக்கம் எண் :

710
 
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக

லூரைப் பாடுமின் புலவீர்காள்

அலம ராதம ருலக மாள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

6


346.நோய னைத்தடந் தோள னேயென்று

நொய்ய மாந்தனை விழுமிய

தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று

சாற்றி னுங்கொடுப் பாரிலை

போயு ழன்றுகண் குழியா தேயெந்தை

புகலூர் பாடுமின் புலவீர்காள்

ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

7



ஒருவரும் இல்லை; ஆதலின், வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின் மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.

கு-ரை: 'மாந்தர்' என்பதேயன்றி, 'மாந்தன்' என்னும் சொல்லும் உளது என்க. (சூளாமணி - தூது. 40) 'மாந்தர்' என்பதே பாடமாயின், ஒருமைப் பன்மை மயக்கமாம். 'இளையனே யென்று' என்றும் பாடம் ஓதுவர்.

7. பொ-ரை: தொழுநோயால் வருந்துகின்றவனை, 'பெரிய தோள்களை யுடைய மல்லனே' என்றும், ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை, 'இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை பொருந்திய தாய்போல்பவன் அன்றோ' என்றும், நுமக்கு வரும் இளிவரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல், எம் தந்தையாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.

கு-ரை: ''விழுமிய தாய் அன்றோ'' என்றதில், 'அன்றோ'