347. | எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் | | ஈக்கும் ஈகில னாகிலும் | | வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று | | வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை | | புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக | | லூரைப் பாடுமின் புலவீர்காள் | | அள்ளற் பட்டழுந் தாது போவதற் | | கியாதும் ஐயுற வில்லையே. | | 8 |
348. | கற்றி லாதானைக் கற்று நல்லனே | | காம தேவனை யொக்குமே | | முற்றி லாதானை முற்ற னேயென்று | | மொழியி னுங்கொடுப் பாரிலை |
என்பது, அத்தொடர்மொழியின் பொருள் நோக்கி வந்தது. ஆயம் - வருத்தம். (தமிழ் லெக்ஸிகன்) 8. பொ-ரை: புலவர்காள், எள் விழுந்த இடத்தை, அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து நோக்கித் தேடுபவனாயும், ஈக்கும் ஈயாது சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை, 'அள்ளி வீசும் வள்ளலே, எங்கட்கு வலிமையாய் உள்ளவனே' என்று சொல்லி வாழ்த்துதலைச் செய்யினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை; ஆதலின், பறவைகளெல்லாம் சென்று சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின்; பாடினால், உலகியலாகிய சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை. கு-ரை: 'விழுந்த' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வயல்களின் நீர் வளத்தாலும், பழுத்த மரங்களையுடைய சோலைகளின் வளத்தாலும், புள்ளெலாம் சென்று சேர்தல் உளதாயிற்று என்க. அள்ளல், நரகமுமாம். 9. பொ-ரை: புலவர்காள், ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை, 'மிகவும் கற்று வல்லனாயினானே' என்றும், அழகு சிறிதும் இல்லாதவனை, 'அழகில் காமதேவனை ஒப்பானே' என்றும், ஆண்டும் அறிவும் முதிராதவனை, அவற்றால் முதிர்ந்தவனே என்றும்
|