பக்கம் எண் :

712
 
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக

லூரைப் பாடுமின் புலவீர்காள்

அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

9


349.தைய லாருக்கொர் காம னேசால

நலவ ழகுடை ஐயனே

கையு லாவிய வேல னேயென்று

கழறி னுங்கொடுப் பாரிலை

பொய்கை வாவியின் மேதி பாய்புக

லூரைப் பாடமின் புலவீர்காள்

ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

10



புனைந்து கூறிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரர் உலகிற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.

கு-ரை: ஆண்டு முதிர்வால் அடிப்படும் அறிவு மிகுதலின், அதுவும் பெருமை தருவதாயிற்று. மரங்களின் செறிவால் பகலவன் ஒளி புகாமையின் பகலும் இரவே போல்வதாயினமையின், ஆந்தைகளின் பாட்டு அறாதாயிற்று.

10. பொ-ரை: புலவர்காள், யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை, 'மகளிருள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே, ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே, முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே' என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை; ஆதலின், பெரிய பொய்கைகளிலும், சிறிய குளங்களிலும் எருமைகள் வீழந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின்; பாடினால், அமரருலகத்திற்குத் தலைவராய், அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.