| வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும் | | வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை | | இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத் | | துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. | | 3 | 386. | நாற்றானத் தொருவனை நானாய பரனை | | நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக் | | காற்றானைத் தீயானைக் கடலானை மலையின் | | தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள | | ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான் | | | தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண் | | ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத் | | துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. | | 4 |
கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, 'விண்ணுலகத்தார்க்குத் தலைவனே, மண்ணுலகத்தவர் எதிர் நின்று துதிக்கும் கரும்பே, என் கட்டியே' என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு, வினை என் உள்ளத்தை விட்டு நீங்காமையால், அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறுபொழுதினும் யான் அறியாது அவனை இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்! கு-ரை: ''விடகிலா'' என்றதன்பின், 'ஆக' என்பது எஞ்சி நின்றது. 'வீடகிலா' என்றும் பாடம் ஓதுவர். 'உறைவானை உள்கிவிரும்பினேற்கு' எனக் கூட்டுக. ''கட்டியே'' என்றவிடத்து, ''கரும்பே'' என்றதற்கேற்ப வந்த ஏகாரம், தொகுத்தலாயிற்று. 'மாதராளால்' எனத் தொகுக்கப்பட்ட உருபு விரிக்கப்படுமாதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. 'உருமாறி' என்பது, ஆற்றலான் வந்து இயையும். ''வளராத'' என்றது, 'இளைய' என்னும் பொருளது. ''உடன் துயில வைத்தருளும்'' என்றது, பகையாய அவற்றைப் பகை நீங்கி அச்சமற்று வாழ அருள்செய்தான் என்றபடி. 4. பொ-ரை: மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும், என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும், திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும், வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும், 'காற்று, தீ, கடல்' என்னும் பொருள்களாய் உள்ளவனும், கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும், வேகமான 'கங்கையாறு' என்னும் வெள்ள
|