பக்கம் எண் :

739
 
அன்னேஎன் னத்தாஎன் றமரரா லமரப்

படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை

என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை யிறைபோதும் இகழ்வன்போ லியானே.

2

 
385.விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே

விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்

கரும்பேஎன் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்

காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை



பெற்றதென்! ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தொடு வாழ்வேனாயினேன். அன்றியும், 'பொன்னே! நல்ல மாணிக்கமே! வெண்மையான முத்தே! செம்மையான பவள மலையே! முதல்வனே!' என்று, அவனை நினைத்துப் பாடுவேன். அங்ஙனமாக, 'எங்கள் தாய்போல்பவனே, தந்தை போல்பவன' என்று தேவர்களால் விரும்பி வழிபடப்படுபவனும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும், அலையெறிகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய என் இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிதுபொழுதினும் யான், அறியாது இகழ் வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனி யொருகாலும் அது வாயாது போலும்!

கு-ரை: ஆட்கொள்ளப்படுதற்கு முன்னர் நிகழ்ந்தன யாவும், ஆட்கொள்ளப்பட்ட பின்னர்த் தொடர்பில்லா தொழிதலின், ''முன்னே எம்பெருமானை மறந்தென்கொல், மறவாதொழிந்தென்கொல்'' என்றார். 'உன்னையே புகழ்வேன்' என்பது பிழைபட்ட பாடம். 'எறிகெடில வடவீரட்டானத்துறைவான்' என்பது. ஒரு பெயர்த் தன்மைத்தாய், ''என்'' என்றதனோடு இயைந்தது. திருவதிகை, தலத்தின் பெயர்; வீரட்டானம் கோயிலின் பெயர். ''அதிகைமாநகருள் வாழ்பவனை, வீரட்டானத் துறைவானை'' எனப் பிரித்தோதினார், இரண்டனது சிறப்பும் உணர்த்தற்கு.

3. பொ-ரை: காதல் பொருந்திய உமையவள், உடம்பில் ஒரு கூறாய் இருத்தலின், கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து, அதனோடு இளைய பிறையையும், கீற்றுக்கள் பொருந்திய பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய, மிக்க நீர் வந்து மோதுகின்ற கெடில நதியின் வடகரைக்