பக்கம் எண் :

738
 
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்

ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை எறிகெடில வடவீரட் டானத்

துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

1


384.முன்னேஎம் பெருமானை மறந்தென்கொல் மறவா

தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்

பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்

குன்றமே ஈசனென் றுன்னியே புகழ்வேன்



எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத, நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான், சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும், விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும், யானையின் தோலைப் போர்பவனும், கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும், விடையைக் கொடியாக உடையவனும், எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்!

கு-ரை: சாதி - தன்மை. 'எம்மான்றன் அடிகொண்டு' என்பது பாடம் அன்மை யறிக. 'அடிக்கொண்டு' என்றவிடத்துக் ககரவொற்று, இசையின்பம் நோக்கி வந்த விரித்தல். ''அம்மான் தன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற'' என்றதனால், இகழ்ந்தமை, 'அது செய்யவந்த காலத்து' என்பது பெறப்பட்டது 'கொண்டு' என மிகுத்தோதியதனால் வைத்தேவிடுதல் பெறப்பட்டது. இது, வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும். இறுதிக்கண்நின்ற, ''யான்'' என்பதனை, ''நாயேன்'' என்றதனோடு கூட்டுக. 'போலும்' என்னும் உரையசைச் சொல், குறைந்து நின்றது. வருகின்ற திருப்பாடலில் உள்ள ''என்னே'' என்பது, எல்லாத் திருப் பாடல்களிலும் வந்து இயையுமாகலின், 'என் மடமை யிருந்தவாறு' என்பது சொல்லெச்சம். 'இனியொரு காலும் அது வாயாது போலும்' என்பது குறிப்பெச்சம்.

2. பொ-ரை: எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென்! மறவாதிருந்து