38. திருவதிகை வீரட்டானம் பதிக வரலாறு: பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரர், திருநாவலூரிலிருந்து திருத்துறையூர் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு தில்லைக்கூத்தப் பெருமானை வணங்கச் செல்லும் பொழுதில், திருவதிகை வீரட்டானத்திற்கு வந்து, அப்பர்பெருமான் திருத்தொண்டு புரிந்திருந்த தலம் என அதனை மிதிக்க அஞ்சி, அதன்புறத்தேயுள்ள சித்தவடமடத்தில் தங்கித் துயின்றார். அப்போது பெருமான், அந்தணர் உருக்கொண்டு வந்து, சுந்தரர் தலைமீது கால்களை வைத்துப் படுத்திருந்தார். தம்பிரான் தோழர், 'என் தலை மீது கால் வைத்துள்ளீரே' என்று கேட்க, ''திசையறியா வகைசெய்தது என்னுடைய மூப்புக்காண்'' என்று சொல்லக்கேட்டு, வேறு திசையில் தலை வைத்துத் துயின்றார். மீண்டும் திருத்தாளைத் தலைமீது நீட்டியதைக் கண்ட சுந்தரர், 'பல முறையும் என் தலைமீது கால்களை வைக்கும் நீர் யார்?' என்று வினவியவுடன், ''நம்மை அறிந்திலையோ'' எனக் கூறி அந்தணர் வடிவில் வந்த பெருமான் மறைந்தருளினான். பெருமான் திருவருளையறியாது செம்மாந்திருந்தேன் என இரங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. தடுத். புரா. 88) குறிப்பு: இத்திருப்பதிகம் நுதலியபொருள் இதன் வரலாற்றானே விளங்கும். பண்: கொல்லிக்கௌவாணம் பதிக எண்: 38 திருச்சிற்றம்பலம் 383. | தம்மானை யறியாத சாதியா ருளரே | | சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் | | கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட | | லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் |
1. பொ-ரை: உலகில், தம் தலைவனை உருவறியாத இயல் புடையவரும் உளரோ! இல்லை; அங்ஙனமாக, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான், தனது திருவடியை
|