| சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப் பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து, வாயால் துதித்து, கையால் தொழுகின்ற தந்தையாரும், அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை, அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும், சிங்கடிக்குத் தந்தையும், உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின். கு-ரை: 'பாடினால், அவன் எய்திய பயனை நீவிரும் எய்துவீர், என்பது குறிப்பெச்சம். நினைதற் கருவியாகிய உள்ளத்தைக் கூறிய குறிப்பால், ஏனைய ஏத்தல், தொழுதல்களுக்கும் உரிய கருவிகள் கொள்ளப்பட்டன, ''அத்தன்'' என்றது, பன்மை யொருமை மயக்கம். ''வைத்த புகழ்'' என்ற பெயரெச்சத் தொடர் காரண காரியப் பொருட்டு. எயர்கோன் கலிக்காமர் புராணம் | | ஆதிதிரு வன்பர்எதிர் | அணையவவர் முகம்நோக்கிக் | கோதிலிசை யாற்குருகு | பாயவெனக் கோத்தெடுத்தே | ஏதிலார் போல்வினவி | ஏசறவால் திருப்பதிகம் | காதல்புரி கைக்கிளையால் | பாடியே கலந்தணைவார். | -தி. 12 சேக்கிழார். |
|