பக்கம் எண் :

735
 
380.குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தண்ஆ ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.

9

 
381.கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே.

10


382.நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச்


9. பொ-ரை: குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச, குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட, பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோகைளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும், துதித்துத் தேடுகின்ற வகையையும், நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?

கு-ரை: இதனையும் மேற்கூறிய வெண்ணாரைகளோடே கூறினாள் என்க.

10. பொ-ரை: நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே, குயில்களே, வண்டுகளே, நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்புயான் அவரைப் பாடும் முறையையும், பணிந்து புகழும் முறையையும், அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?

கு-ரை: சேவலொடு கூடியுள்ள நீங்கள் இவற்றைச் சொல்ல வல்லீர்கள் என்பாள், 'கூடும் அன்னப் பெடைகாள் என்றாள். பாடுதல், முன்னர்க் கூறினமையின், ஏத்துதல், உரையல் என்க. கூடுதலும் ஊடுதலும், அடையப் பெற்ற பின்னவாகலின், பின் நிகழ்வன பிறவற்றையுங் கூறினாள், தனது அன்பின் நிலையை உணர்த்தற்கு.

11. பொ-ரை: அடியவராய் உள்ளவர்களே. மெய்யுணர்ந்தோர்