| பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன் ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே. | | 7 |
379. | சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் அற்றமுற் றப்பகர்ந் தடிகள்ஆ ரூரர்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் லீர்களே. | | 8 |
பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப்பெய்தி, பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ? கு-ரை: 'தேனையுண்ணும் விருப்பத்தை விடுத்து இது செய்தல் வேண்டும்' என்பாள், ''தேன் நலங் கொண்ட தேன் வண்டுகாள்'' என்றாள். ''தேன்'' என்பதும், வண்டுகளில் ஒரு வகை. ''தேன் வண்டு'' என்பது. உம்மைத் தொகையாய் ஒரு சொல்தன்மைப் பட்டு ஈற்றில் விளியேற்றமையின், இவ்வாறு உரைக்கப்பட்டது. இனி, 'தேன் வண்டு' என்பது ஒரு சொல்லாய் வாளா பெயராய் நின்றது எனினுமாம். ''பயந்து'' என்னும் எச்சம், எண்ணின் கண் வந்தது ''ஊண்'', ஆகுபெயர். சிறப்பும்மை மாற்றியுரைக்கப்பட்டது; நின்றாங்கு நிறுத்தி, எச்சப் பொருட்டாக உரைத்தல் சிறவாமையறிக. 8. பொ-ரை: சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது துன்பத்தை முடியச் சொல்லி, எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும், யான் பலராலும் அவர் தூற்றப்படுதலையும், எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ? கு-ரை: ''சுற்று'' என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய், அதனையுடைய இடத்தை உணர்த்திற்று. அற்றம் - தளர்ச்சி. ''பற்று'' என்றது, என்றும் தாங்குவோரையும், 'உறவு' என்றது, உற்றுழி உதவுவோரையும் என்க. பாடு - பெருமை. அஃது இன்மை இழிக்கப்படுதலை உணர்த்திற்று. இவ்விடத்துள்ள மற்று, அசைநிலை. 'உற்றார்' என்பது, ஈறு குறைந்து நின்றது.
|