பக்கம் எண் :

733
 
376.இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை யடிகள்ஆ ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

5


377.வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகள்ஆ ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

6


378.தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகள்ஆ ரூரர்க்குப்


5. பொ-ரை: இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே, அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப்படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது உடை நெகிழ்கின்றதையும், உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும், கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லர்களோ?

கு-ரை: சோலையது நிழலின்பத்தில், எனது வருத்தத்தை நினைக்கின்றிலீர் போலும் என்பாள், ''இலைகொள் சோலைத்தலை இருக்கும் வெண்ணாரைகாள்'' என விளித்தாள்.

6. பொ-ரை: வண்டுகளே, மேகங்களே, நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே, வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும், அன்றுமுதல் காமத் தீ, கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?

கு-ரை: 'ஒருநாள்' என்பது, சொல்லெச்சம். உடம்பு உளதாய் நிற்பினும் செயலற்றுக் கிடத்தலின், 'உண்டது' என்றாள்.

7. பொ-ரை: தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே, வண்டுகளே, மேகங்களே, பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு,