387. | சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் | | உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக் | | கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள் | | சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி | | வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி | | மறிகடலை இடங்கொள்வான் மலைஆரம் வாரி | | ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத் | | துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே. | | 5 |
நீரைத் தாங்கியவனும், பிறையைச் சூடினவனும், பெரியோனும், என் தந்தைக்கும் தலைவனும், யாவராலும் அறிதற்கு அரிய, சிவந்த கண்களையுடைய இடபவாகனனும், அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை, அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும், யான் அறியாது இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமைஇருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாதுபோலும்! கு-ரை: 'நாலாந்தானம்' எனற்பாலது, நாற்றானம் எனப்பட்டது. 'நாதாந்தத் தேயிருப்பர் நாற்றானத் தேயிருப்பர்' என்றது காண்க. (திருக்களிற்றுப்படியார்-80) 'சிவபெருமான் நாலாமவனாய துரியமூர்த்தி' என்பது வேதத்தின் துணிபு. ''நாற்றானம்'' என்றதற்கு, 'நான்கு திசை' எனவும், 'வைப்புத் தலத்தின் பெயர்' எனவும் உரைப்பாரும் உளர். வெள்ளாறு, வைப்புத் தலம். 'கங்கை ஆற்று வெள்ள நீரானை' என மாற்றுக. ''எம்மான் தம்மான்'' என்றது, 'தம் குடி முழுதும் ஆளுடையான்' என்றவாறு. 5. பொ-ரை: 'முருகப்பிரானார், அவர்க்குத் தாயாகிய மலைமகள்' என்னும் இவர்களது அழகிய நிறத்தையும், அன்பையும் ஏற்றுடையவனும், திருவதிகைமாநகரில் வாழ்கின்றவனும், தாழ்ந்த கூந்தலையும், குயில் போலும் மொழியினையும் உடைய நீர்மகளைச் சடையிடத்திற் கொண்ட, கயல் மீனினது கூட்டங்கள் குதிகொள்ளுதலால் விளக்கமுற்றுப் பொருந்திய நீர் பெருகி வர, அதனிடத்து உயர்ந்தெழுகின்ற அலைகள் மராமரங்களை முரித்துத் தள்ளிக்கொண்டு, அலை மறிகின்ற கடலை இடமாகக் கொள்ளும்படி, மலையிடத்துள்ள சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும்
|