302. | விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக | | வேலி தோறும் | | கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங் | | கருப்ப றியலூர்க் | | குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங் | | கொகுடிக் கோயில் | | இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் | | கினிய வாறே. | | 4 |
303. | பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் | | கச்சை யானைக் | | கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங் | | கருப்ப றியலூர்க் |
4. பொ-ரை: கல்வியில் வல்ல அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு, வேலிகள் தோறும், பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும், வரிசையான வளைகளையும் உடைவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது. கு-ரை: 'விருந்து' என்பது, செய்யுள் உறுப்புக்களுள் ஒரு பகுதி யவாகிய எண்வகை வனப்புக்களுள் ஒன்று என்பதும், அஃது யாப்புக்களைப் புதுப்புது வகையில் தொகுப்பது என்பதும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாக்களாலும், உரைகளாலும் தெளிந்து கொள்க. அதனானே, திருப்பதிகங்களும் 'விருந்து' என்னும் வனப்பினவாதல் அறியப்படும். "வினைபோக" என, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. 'செங்கனிகள்' என்றமையால், வாழை செவ்வாழையாயிற்று. குருத்து, 'குருந்து' என மெலித்தலாயிற்று. அம்மை என்றும் கன்னியேயாதலின், அப்பொழுது வீழ்ந்து முளைத்த பல்லுடையள் எனப்படுவள். குருத்து, வெண்மையுமாம். இத் திருப்பாடலுள், பாமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது. 5. பொ-ரை: நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும், சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை உடையவனும், நறுமணம்
|