பக்கம் எண் :

784
 
433.கொங்கார்மலர்க் கொன்றையந் தாரவனே

கொடுகொட்டியொர் வீணை யுடையவனே

பொங்காடர வும்புன லுஞ்சடைமேற்

பொதியும்புனி தாபுனஞ் சூழ்ந்தழகார்

துங்கார்புன லுட்பெய்து கொண்டுமண்டித்

திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்

வெங்கார்வயல் சூழ்வெஞ்ச மாக்கூடல்

விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

9


434.வஞ்சிநுண்ணிடை யார்மயிற் சாயலன்னார்

வடிவேற்கண்நல் லார்பலர் வந்திறைஞ்சும்

வெஞ்சமாக்கூஉ டல்விகிர் தாஅடியே

னையும்வேண்டுதி யேஎன்று தான்விரும்பி



9. பொ-ரை: தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே, கொடுகொட்டியையும் வீணையொன்றையும் உடையவனே, சீற்றம் மிக்க, ஆடுகின்ற பாம்பும் தண்ணீரும் சடையில் நிறைந்துள்ள தூயவனே, காடுகளைச் சூழ்ந்து அழகுமிகுகின்ற, உயர்வு பொருந்திய நீருள், காடுபடு பொருள்கள் பலவற்றை இட்டுக்கொண்டு, கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, விரும்பத்தக்க நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.

கு-ரை: 'கொடுகொட்டி' என்னும் பறை அடிக்கப்படுதற் கேற்ப ஆடுதலின், அக்கூத்து, 'கொடுகொட்டி' எனப்பட்டது என்க. ''புனஞ்சூழ்ந்து'' என்றதனால், புனலுட் பெய்யப்படுவன, காடுபடு பொருள்களாயின.

10. பொ-ரை: 'வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையையுடையவரும், மயில்போலும் சாயலை யுடையவரும், கூர்மை பொருந்திய வேல்போலும் கண்களையுடையவரும் ஆகிய மகளிர் பலர் வந்து வணங்குகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்' என்று,