பக்கம் எண் :

785
 
வஞ்சியாதளிக் கும்வயல் நாவலர்கோன்

வனப்பகை யப்பன்வன்ன் றொண்டன்சொன்ன

செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும்வல்லார்

சிவலோகத்தி ருப்பது திண்ணமன்றே.

10

திருச்சிற்றம்பலம்


விளைவுகளை வஞ்சியாதளிக்கின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டன் விரும்பிப் பாடிய செவ்விய சொற்களாலாகிய இத்தமிழ்மாலைகள் பத்தினையும் பாட வல்லவர் சிவலோகத்தில் வீற்றிருத்தல் திண்ணம்.

கு-ரை: தான், அசைநிலை. மிகக் கொடுப்பவரை, 'வஞ்சியாது கொடுப்பவர்' என்னும் வழக்குப் பற்றி, ''வஞ்சியாது அளிக்கும் வயல்'' என்று அருளினார். இனி, 'வஞ்சியாது அளிக்கும் நாவலூரர்' என, நாவலூரில் உள்ளார்க்கு அடையாக்கலுமாம். நாவலூரை, 'நாவல்' என்றல், பான்மை வழக்கு. 'என்று வன்றொண்டன் விரும்பிச் சொன்ன' என இயையும். ''வன்ன்றொண்டன்'' என ஒற்றளபெடை வந்தது. அளபெடையின்றி ஓதுதல் கூடாமையறிக.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

  
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்

அருவரைச் சுரங்களும் பிறவும்

பாயுநீர் நதியும் பலபல கடந்து

பரமர்தம் பதிபல பணிந்து

மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி

வெஞ்சமாக் கூடலும் பணிந்து

சேயிட கழியப் போந்துவந் தடைந்தார்

தென்திருக் கற்குடி மலையில். 

92

-தி. 12 சேக்கிழார்