பக்கம் எண் :

796
 
452.தாருந்தண் கொன்றையுங் கூவி

ளந்தனி மத்தமும்

ஆரும் அளவறி யாத

ஆதியும் அந்தமும்

ஊரும்ஒன் றில்லை உலகெ

லாம்உகப் பார்தொழப்

பேரும்ஓ ராயிர மென்ப

ரால்எம் பிரானுக்கே.

7


453.அரியொடு பூமிசை யானும்

ஆதியும் அறிகிலார்

வரிதரு பாம்பொடு வன்னி

திங்களும் மத்தமும்

புரிதரு புன்சடை வைத்த

எம்புனி தற்கினி

எரியன்றி அங்கைக்கொன் றில்லை

யோஎம் பிரானுக்கே.

8



கு-ரை: ''மறை'' என்றது, 'ஒருவருக்கும் விளங்காதன' என்னும் பொருளதாய், சிறப்பின்மை தோற்றுவித்தது.

7. பொ-ரை: எம் பெருமானுக்கு, மாலையும், 'தண்ணிய கொன்றைப் பூ, கூவிளையிலை, மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ' என்பன. அளவும் யாராலும் அறியப்படாத முதலும், முடிவும்; உலகம் முழுதுமாம். சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர்; அவன் இவ்வாறிருத்தல் என்னோ!

கு-ரை: ஆதியும், அந்தமும் அறியப்படாமை முதலியன அவன் அணுகலாகாது நிற்றலைக் குறிப்பனவாய், நகுதற்கு ஏதுவாயின.

8. பொ-ரை: கீற்றுக்களையுடைய பாம்போடு, 'வன்னி, ஊமத்தை, பிறை' என்பவைகளை, புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை, திருமாலும், பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார்; பிறர் ஆர்