பக்கம் எண் :

798
 
ஆயின சீர்ப்பகை ஞானியப்

பனடித் தொண்டன்றான்

ஏசின பேசுமின் தொண்டர்

காள்எம் பிரானையே.

10

திருச்சிற்றம்பலம்


பெருமானை, அவன் அடித்தொண்டனும், மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும், ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால், எம் பெருமானைப் பாடுமின்.

கு-ரை: 'பயன் பெறுவீர்' என்பது குறிப்பெச்சம். ''காய் சினம்'' என்றது இன அடை. ஞானி - ஞானமுறையினன். 'ஞானவப்பன்' எனப் பாடம் ஓதுதலுமாம். ''ஞானத்தந்தை'' என்றது, வனப் பகையைத் தம் மகளாகவும், தம்மை அவள் தந்தையாகவும் கருதிநிற்றல்பற்றி.

சேரமான் பெருமாள் நாயனார் புராணம்

 
இறைவர் கோயில் மணிமுன்றில்

வலம்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு

நிறையும் காத லுடன் வீழ்ந்து

பணிந்து நேர்நின் றாரூரர்

முறையில் விளம்பும் திருப்பதிகம்

முடிப்பது கங்கை யென்றெடுத்துப்

பிறைகொள் முடியார் தமைப்பாடிப்

பரவிப் பெருமா ளுடன் தொழுதார்.

 146

-தி. 12 சேக்கிழார்