பக்கம் எண் :

799
 

45. திருவாமாத்தூர்

பதிக வரலாறு:

நம்பியாரூரர், சங்கிலியாரைப் பிரிந்து திருவொற்றியூரைவிட்டு நீங்கியதால் இழந்த கண்களில் இடக்கண்ணைக் காஞ்சியில் பெற்று, பல தலங்களையும் வணங்கிக் கொண்டு திருவாரூருக்குப் போகும் வழயில் திருஆமாத்தூர் இறைவரைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 293)

குறிப்பு: இத்திருப்பதிகம், சுவாமிகள், இறைவர்பால் தமக்குள்ள அன்பின் மிகுதியைப் புலப்படுத்து அருளிச்செய்தது.

பண்: கொல்லிக்கௌவாணம்

பதிக எண்: 45

திருச்சிற்றம்பலம்

456.காண்டனன் காண்டனன் காரிகை

யாள்தன் கருத்தனாய்

ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்

தூர்எம் மடிகட்காட்

பூண்டனன் பூண்டனன் பொய்யன்று

சொல்லுவன் கேண்மின்கள்

மீண்டனன் மீண்டனன் வேதவித்

தல்லா தவர்கட்கே.

1



1. பொ-ரை: அடியேன், திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை, உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன்; அவனுக்கு அடிமை பூண்டேன்; அடிமையைப் பலகாலும் செய்தேன்; இவை பொய்யல்ல; இன்னும் சொல்லுவேன்; கேண்மின்; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன்.

கு-ரை: 'கண்டனன்' என்பது, நீட்டலாயிற்று. கருத்தன் - தலைவன். ஆளுதல் - பயன் படுத்துதல். வித்து - அறிந்தோர்; அது, வேதப்பொருளை மேலானதாக உணர்ந்து போற்றுவோரைக் குறித்தது. 'அல்லாதவர்கட்கு' என்பது, உருபு மயக்கம். இவை, அடியவர் முன்னர்க் கூறியனவாகும். இத்திருப்பாடலிலும் வருகின்ற திருப்