பக்கம் எண் :

800
 
457.பாடுவன் பாடுவன் பார்ப்பதி

தன்னடி பற்றிநான்

தேடுவன் தேடுவன் திண்ணனப்

பற்றிச் செறிதர

ஆடுவன் ஆடுவன் ஆமாத்

தூர்எம் மடிகளைக்

கூடுவன் கூடுவன் குற்றம

தற்றென் குறிப்பொடே.

2


458.காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ

லாலன்று காமனைப்

பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி

னாலன்று கூற்றத்தை

ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்

தூர்எம் மடிகளார்

ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி

ராட்டியைப் பாகமே.

3



பாடல்களிலும், வலியுறுத்தற் பொருட்டுப் பலவற்றையும் அடுக்கிக் கூறி யருளினார் என்க.

2. பொ-ரை: யான், இவ்வுலகிற்குத் தலைவனாகிய, திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, அவனது திருவடியைக் கருதிப் பாடுவேன்; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன்; தேடிக்கண்டு, என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன்; கூடிய களிப்பினால் ஆடுவேன்.

கு-ரை: ''பார்ப் பதி'' என்றதை, 'பாருக்குப் பதி' என்க. 'பார்வதி' என்றுரைத்தற்கு ஏலாமை யறிக. இறுதிக்கண் வைக்கற் பாலதாய, 'ஆடுவன்' என்பதை, செய்யுள் நோக்கி இடைவைத்தார்.

3. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன், அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன்; அன்று, கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன்; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன்; எம்பெருமாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன்.

கு-ரை: ஆய்ந்தவன், 'நுணுகியவன்' எனலுமாம். 'ஆர'