459. | ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் | | ளேநின்ற ஒண்பொருள் | | சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று | | திருவொற்றி யூர்புக்குச் | | சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி | | மென்றோள் தடமுலை | | ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் | | தூர்ஐயன் அருளதே. | | 4 |
460. | வென்றவன் வென்றவன் வேள்வியில் | | விண்ணவர் தங்களைச் | | சென்றவன் சென்றவன் சில்பலிக் | | கென்று தெருவிடை |
என்பதன், அகரந் தொகுத்தலாயிற்று. 'அடிகளார்' என்றே உரைப்பின், 'காய்ந்தவன்' முதலியவற்றோடு இயையாமை அறிக. 'பாய்ந்தவன் பாரத்தினால்' என்பதும் பாடம் 4. பொ-ரை: யான், என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளியுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன்; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன்; இனி, வெளியே, திருவொற்றியூரிற் புகுந்து, 'சங்கிலி' என்பாளது மெல்லிய தோளையும், பெரிய தனங்களையும் பொருந்தினேன்; இவ்விருவாற்றானும், இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன்; இது, திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனது திருவருள். கு-ரை: 'உள்ளத்துள்ளே' என்றதனால், 'வெளியே' என்பது பெறப்பட்டது. ''உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள்'' என வேறு போல அருளினார், பிறர் மதம் பற்றி அருளுகின்றாராதலின், 'ஆமாத்தூர் ஐயன் அருளைப்பெறும் பாக்கியம் இல்லாதார், இருதலைப் போகமும் இழப்பர் (தி.1 ப.116 பா.10); அதனைப்பெற்ற எம் போல்வாராயின், அவற்றை ஒருங்கே பெற்றுக்களிப்பர்' என்று அருளிச்செய்தவாறு. ''அது'' பகுதிப்பொருள் விகுதி. சிறிதுணர்ந்து, ஐயுறுவாரைத் தேற்றுவாராகாது, சிறிதும் உணராதாரை உணர்த்து கின்றாராதலின், ஏகாரம், தேற்றம் அன்று; ஈற்றசை. 5. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன், தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன்;
|